மேட்டுப்பாளையம் – கோவை இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சருக்கு எல்.முருகன் கோரிக்கை. மேட்டுப்பாளையம்-கோவை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சரிடம் எல்.முருகன் கோரிக்கை
புது தில்லி: மேட்டுப்பாளையம்-கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை ரயில் நிலையம் செல்லும் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மனு அளித்துள்ளார்.
எல் முருகன் வெளியிட்ட ஒரு பதிவு செய்ய வேண்டும். அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணோவை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.