கர்நாடகாவில் உள்ள ராமநகராவின் பெயரை மாற்ற முடிவு. கர்நாடக அமைச்சரவை ராமநகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்றியுள்ளது

பெங்களூரு: 2007ல், முன்னாள் கர்நாடக முதல்வரும், மஜத தலைவருமான குமாரசாமி, பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ராமநகரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார்.

அப்போது டி.கே.சிவகுமாரின் சொந்த ஊரான கனக்புரா அந்தமாவட்டத்தில் இணைக்கப்பட்டது. டி.கே.சிவகுமார் தனது நகரத்தை பெங்களூருவுடன் மீண்டும் இணைக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதையடுத்து, ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு மாவட்டம் என மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் மஜத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *