2026ல் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை | 2026ல் இபிஎஸ் முதல்வராக வருவார் என எஸ்பி வேலுமணி நம்புகிறார்
கோவை: 2026ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார் என முன்னாள் அமைச்சரும், சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று மாலை கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் கொண்டாடப்படுகிறது. சாமானியர்களும் அரசியலில் உயர் பதவிகளை அடையும் நிலையைப் பேரறிஞர் அண்ணா உருவாக்கினார். எடப்பாடி பழனிசாமியும் கோவைக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். ஆனால் இன்று அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எதுவும் திமுக ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை.
கோயம்புத்தூரிலும் கேரள மக்கள் அதிக அளவில் உள்ளனர். தங்கள் அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். 2026ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என வேலுமணி தெரிவித்துள்ளார்.