தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது
சென்னை: சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மார்ச் 28 அன்று, இதுவரை இல்லாத அளவு ரூ.50,000ஐ எட்டியது. இதையடுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.54,400 ஆகவும், கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.6,800 ஆகவும் விற்பனையானது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.58,160க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 உயர்ந்து கிராமுக்கு ரூ.98 ஆகவும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.98,000 ஆகவும் இருந்தது.