கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கு ரூ.1.14 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
தஞ்சாவூர்: கஜா புயலால் மறவல்லி மற்றும் வாழை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தும் நஷ்டமடைந்த 6 விவசாயிகளுக்கு தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) ரூ.1.14 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்ட விவசாயிகள் ராமசாமி மகன் பவுன்ராஜ், பெரியசாமி மகன் சுந்தர்வேல், ரத்தினம் மகன் குணசேகரன், பிரகாஷ், வீரடிப்பட்டியைச் சேர்ந்த துரைசாமி மகன் பெரியசாமி, அழகப்பன் மகன் பாஸ்கர் ஆகியோர் வீரடிப்பட்டியில் மாமரம், வாழை பயிரிட்டுள்ளனர். இதற்காக புதுக்கோட்டை நியூ இந்தியா…