அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு. அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது
வாஷிங்டன்: அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் முகாமிட்டார். இதன் பிறகு சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் 13,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதையின் மூலம் ஏவுகணைகள், பீரங்கிகள், பிரம்மோஸ் உள்ளிட்ட ராணுவ வாகனங்களை சீன எல்லைக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். பிரதமர்…